மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்
சிவகங்கையில் வருகிற 30-ந் தேதி மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் வருகிற 30-ந் தேதி மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
குறைதீர்க்கும் கூட்டம்
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் மாவட்ட அளவில் வருகிற 30-ந் தேதி காலை 10 மணியளவில் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைவழங்குதல், யு.டி.ஐ.டி. பதிவு செய்தல், ஆதார் அட்டை பதிவு, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு, பிறதுறைகளின் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான கோரிக்கை மனுக்கள் பெறுதல், உதவி உபகரணங்கள், வங்கி கடனுதவி, வேலைவாய்ப்பு பயிற்சி, பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும்.
பயனடையலாம்
மேற்குறிப்பிட்ட உதவிகளை பெறுவதற்கு ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 4, குடும்ப அட்டை நகல் அல்லது ஆதார் அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று ஆகியவற்றுடன் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.