இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு கூட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு கூட்டம்
x
தினத்தந்தி 26 Nov 2022 12:15 AM IST (Updated: 26 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு கூட்டம் திருப்புவனத்தில் நடைபெற்றது.

சிவகங்கை

திருப்புவனம்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு கூட்டம் திருப்புவனத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் வீராச்சாமி தலைமை தாங்கினார். திருப்புவனம் ஒன்றியத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் அதை அப்புறப்படுத்த வேண்டும். திருப்புவனத்தில் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், தீயணைப்பு நிலையம் உடனடியாக திறக்க வேண்டும். திருப்புவனம் வட்டாரத்தில் கொசு தொல்லையை போக்க அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களையும் அதிகாரிகள் பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பழையனூரில் சுற்றியுள்ள 30 கிராம மக்களின் நலன் கருதி தேசிய மயமாக்கப்பட்ட வங்கியும், ஏ.டி.எம். மையமும் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றிய செயலாளர் மோகன், மாவட்ட குழு உறுப்பினர் சுந்தரலிங்கம், ஒன்றிய துணை செயலாளர் தவிடன், நகர் செயலாளர் ஜெயப்பிரகாஷ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் வீரபத்திரன், கணேசன், ராஜேந்திரன், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story