அனைத்து கட்சி கூட்டம்
அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரியில் நான்கு ரோடு சந்திப்பு அருகே பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. தற்போது இட வசதிகள் பற்றாக்குறையால் புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு சார்பில் சார்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய கட்டிடத்துக்கான இட தேர்வு பேரூராட்சி மன்ற தலைவர் அம்பல முத்து, துணை தலைவர் இந்தியன் செந்தில் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. அதன்படி சிங்கம்புணரி சீரணி அரங்கம் அருகில் கட்டிடம் அமைப்பதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி கருத்து கேட்கப்பட்டது. மன்ற தலைவர் அம்பலமுத்து, துணை தலைவர் இந்தியன் செந்தில், செயல் அலுவலர் ஜான் முகமது தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சீரணி அரங்கம் அருகில் புதிய பேரூராட்சி கட்டிடம் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.