செயற்குழு கூட்டம்


செயற்குழு கூட்டம்
x

திராவிட நட்புக்கழகத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி செஞ்சைகலைஞர் பவள விழா மாளிகையில் திராவிட நட்புக்கழகத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் சிதம்பரம் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தியாகராஜன், காத்தமுத்து, திராவிட கழக மாவட்ட தலைவர் அரங்கசாமி, நகர செயலாளர் கலைமணி, திராவிட இயக்க தமிழர் பேரவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரன் தாஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினர். கூட்டத்தில் காரைக்குடி அரசு சட்டக் கல்லூரிக்கு திராவிடர் கழக மூத்த தலைவர் காரைக்குடி ராம சுப்பையா பெயரை சூட்ட வேண்டும். தமிழ்நாடு அரசு தொடங்கும் கல்லூரிகளுக்கு திராவிட இயக்க வரலாறுகளை நினைவுபடுத்தும் வகையில் சமூக செயற்பாட்டாளர்கள் பெயர்களை வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. திராவிட இயக்க தமிழர் பேரவை நகர் செயலாளர் நவீன் நன்றி கூறினார்.


Next Story