அரசியலில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்


அரசியலில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்
x

அரசியலில் மாணவர்கள் ஆர்வம் காட்டவேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.

சிவகங்கை

காரைக்குடி,

அரசியலில் மாணவர்கள் ஆர்வம் காட்டவேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.

இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சி

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கலாசார மன்றம் ஆகியவற்றின் சார்பில் தேசிய இளைஞர் நாடாளுமன்ற நிகழ்வு பல்கலைக்கழக பழனியப்ப செட்டியார் நினைவரங்கில் நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் வரவேற்றார். அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி தலைமை உரையின்போது பேசியதாவது:-

இந்தநிகழ்ச்சி நடத்தப்படுவதன் நோக்கம் ஜனநாயகத்தின் வேர்களை வலுப்படுத்துவது, ஒழுக்கம், சகிப்புத்தன்மை போன்ற ஆரோக்கியமான பண்புகளை இளைஞர்கள் இடையே வளர்ப்பது அரசாங்கத்தின் நாடாளுமன்ற செயல்பாடுகளை மாணவ சமூகம் அறிந்து கொள்ள உதவுவது போன்றவைகளாகும். இவ்வாறு அவர்கூறினார்.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசியதாவது:- மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு அதிக ஆர்வம் காட்ட வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் அவர்களுக்கு ஒருவித உந்துதலையும், உத்வேகத்தை யும் ஏற்படுத்தும். நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்கும் போது கருத்துடன் அவ்வப்போது நகைச்சுவையும் கலந்து உரையாட வேண்டும்.

நட்பு

அப்போதுதான் சக நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நல்லிணக்கத்தையும் நட்பையும் வளர்த்துக்கொள்ள முடியும். ஒவ்வொரு வருடமும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களின் பணி தொடர்பாக உதவி செய்வதற்கு உதவியாளர்கள் ஊக்கத்தொகையோடு அரசால் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த பணிக்கு அழகப்பா பல்கலைக்கழக மாணவர்களும் தங்களை தயார் படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மாதிரி நாடாளுமன்றம்

மாங்குடி எம்.எல்.ஏ. வாழ்த்துரை வழங்கினார். அவர் தமது வாழ்த்துரையில் மாணவர்கள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற நிகழ்வுகளை அவ்வப்போது கவனித்து அரசியல் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். படிக்கும் பருவத் திலேயே மாணவர்கள் நமது நாட்டின் அரசியல் அமைப்பையும் அரசியல் நடைமுறைகளையும் தெரிந்து கொண்டு அரசியலில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளை சார்ந்த 55 மாணவ-மாணவிகள் பங்கேற்ற மாதிரி நாடாளுமன்ற நிகழ்ச்சி நடை பெற்றது.


Next Story