அரசு பள்ளி ஆசிரியர், மேலாண்மைகுழு கூட்டம்
அரசு பள்ளி ஆசிரியர், மேலாண்மைகுழு கூட்டம் நடந்தது.
ராமநாதபுரம்
திருவாடானை,
திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான கூட்டம் மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் தலைமையில் நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் புல்லானி வரவேற்றார்.
திருவாடானை யூனியனை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழுவினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு பள்ளி மேலாண்மை குழுவின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கல்வித் தரத்திலும் பாதுகாப்பிலும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.
Related Tags :
Next Story