தீர்த்தமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்-மாவட்ட செயலாளர் பழனியப்பன் பங்கேற்பு
தர்மபுரி
அரூர்:
தர்மபுரி மேற்கு மாவட்டத்துக்குட்பட்ட தீர்த்தமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் தீர்த்தமலையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். தர்மபுரி மேற்கு மாவட்ட செயளாலரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் கலந்து கொண்டு, முகவர்களின் பணிகளை ஆய்வு செய்து, ஆலோசனை வழங்கினார். மேலும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரியில் தி.மு.க. வெற்றி பெற கட்சியினர் பாடுபட வேண்டும் என்றார். இதில் பொறுப்பாளர்கள் மனோகரன், ராஜேந்திரன், கிருஷ்ணகுமார், சித்தார்த்தன், நிர்வாகிகள் சண்முக நதி, சண்முகம், தேசிங்குராஜன், தென்னரசு, மதியழகன், பெருமாள், செல்வம், ரஜினி மாறன், சுதாகர், சேகர், மதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story