மாரண்டஅள்ளியில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
மாரண்டஅள்ளி:
தர்மபுரி மேற்கு மாவட்டம் பாலக்கோடு மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மாரண்டஅள்ளியில் தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தகுதி வாய்ந்த அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் உழைக்க வேண்டும் என்று கூறினார். கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் மணி, ராஜகுமாரி, பொருளாளர் முருகன், முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம், மாரண்டஅள்ளி பேரூர் செயலாளரும், பேரூராட்சி தலைவருமான வெங்கடேசன், ஒன்றிய அவைத் தலைவர் முருகன், துணை செயலாளர் சரிதா, பொருளாளர் துரை, மாவட்ட பிரதிநிதிகள் முத்துராஜ், ஜெகநாதன், வெங்கடாஜலபதி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சாமனூர் மணிவண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.