ராமநாதபுரம் நகராட்சி கூட்டம்


ராமநாதபுரம் நகராட்சி கூட்டம்
x
தினத்தந்தி 15 Dec 2022 12:15 AM IST (Updated: 15 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் நகராட்சி கூட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகராட்சி கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைர் பிரவீன்தங்கம், ஆணையாளர் (பொறுப்பு) சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு விவாதங்கள் நடைபெற்றன. அய்யனார்:- ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் சரிவர பணி செய்யாததால் நகரில் குப்பைகள் தேங்கி மக்கள் அவதி அடைகின்றனர். குமார்:- தணிக்கையின்போது தடைசெய்யப்பட்ட தனியார் துப்புரவு நிறுவனத்திற்கு காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆணையாளர்:- துப்புரவு பணிகள் தடைபடக்கூடாது என்பதற்காக காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. தலைவர்:- துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இந்திராமேரி:- 21-வது வார்டில் குடிநீர், தெருவிளக்கு, பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளது. தலைவர்:- ரூ.2 கோடி செலவில் நகர் முழுவதும் எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்படும். குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்துமதி முத்துலட்சுமி:- கவுன்சிலர்கள், பொதுமக்களை நகராட்சி அதிகாரிகள் மதிப்பதில்லை. 3 ஆண்டுகளுக்கு மேல் இங்கு பணியில் உள்ள அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். தலைவர்:- ரூ.8.7 கோடிசெலவில் வாறுகால் அமைப்பதற்கான திட்டம் பரிசீலனையில் உள்ளது. விரைவில் பாதாள சாக்கடை பிரச்சினை சரிசெய்யப்படும்.

தலைவர்:- நகர்முழுவதும் கொசுமருந்து அடிக்கப்படும். புதிய பஸ்நிலையம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட உள்ளது. இங்கு கூடுதலாக கடைகள், பார்க்கிங் வசதி அமைக்கப்படும். நாகராஜன்: மதுரை செட்டிய தெருபகுதியில் பாதாள சாக்கடை தண்ணீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. 9-வது வார்டில் குடிநீர் வரவில்லை. இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றன.


Next Story