இண்டூரில் தி.மு.க. பொதுக்கூட்டம்


இண்டூரில் தி.மு.க. பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் இண்டூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமை தாங்கினார். நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் வைகுந்தன் வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எம்.ஜி.சேகர், பி.தர்மசெல்வன், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் உமாசங்கர், ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் தங்கமணி, பொதுக்குழு உறுப்பினர்கள் சரஸ்வதி துரைசாமி, சோலை மணி, வேலுமணி, நடராஜ், சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாநில தலைவர் டி.எம்.கதிர் ஆனந்த் எம்.பி., தலைமை கழக பேச்சாளர் வேலூர் கென்னடி ஆகியோர் பேசினார்கள். இதில் மாநில விவசாய தொழிலாளர் அணி துணைத் தலைவர் இன்பசேகரன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், செல்வராஜ், மல்லமுத்து, கருணாநிதி, சபரிநாதன், முருகேசன், சேட்டு, நகர செயலாளர் நாட்டான் மாது, சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள் ராஜா, பொன் மகேஸ்வரன், கவுதமன், ரவி, காசிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நல்லம்பள்ளிஒன்றிய குழு துணைத் தலைவர் பெரியண்ணன் நன்றி கூறினார்.


Next Story