மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
சிவகங்கை
திருப்பத்தூர் கோட்ட அளவிலான மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் ஒரு மணி வரை திருப்பத்தூரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் பகிர்மானம் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதற்கு மேற்பார்வை பொறியாளர் ரவி தலைமை தாங்குகிறார். எனவே திருப்பத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் பயனீட்டாளர்கள் மற்றும் விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மின்வாரியம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து பயன் பெறலாம். இந்த தகவலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story