பள்ளி கல்வி செயல்திட்ட ஆலோசனை கூட்டம்


பள்ளி கல்வி செயல்திட்ட ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி செயல்திட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை

சிவகங்கையில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி செயல்திட்ட ஆலோசனை கூட்டம் முதன்மை கல்வி அலுவலர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் பெண் கல்வி, இடைநிற்றல், குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் நலன் பாதுகாப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், மாவட்ட கல்வி அலுவலர்கள் சண்முகநாதன், முத்துசாமி, மாரிமுத்து, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் அருளானந்தம், சம்பத் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story