தர்மபுரி : மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார்.


தர்மபுரி : மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் :  கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார்.
x
தினத்தந்தி 20 Dec 2022 12:15 AM IST (Updated: 20 Dec 2022 5:11 PM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள், குறைகள் தொடர்பாக மனுக்கள் அளிக்கப்பட்டன. மொத்தம் 638 மனுக்கள் பெறப்பட்டன. அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் 5 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கினார். இதில் கூடுதல் கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story