பழனி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தைப்பூச திருவிழா ஆலோசனை


பழனி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தைப்பூச திருவிழா ஆலோசனை
x

பழனி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தைப்பூச திருவிழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்

பழனி முருகன் கோவிலில் அடுத்த மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் 29-ந்தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு தற்போதே பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வரத்தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பாதுகாப்பாக வர செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் பழனி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு ஆர்.டி.ஓ. சிவக்குமார் தலைமை தாங்கினார். தாசில்தார் சசிக்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் சிவசக்தி (பழனி), முருகேசன் (ஒட்டன்சத்திரம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கான பாதயாத்திரை பாதையை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விரைந்து சரிசெய்வது, சாலையில் வரும் வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு விதிப்பது, ஒளிரும் பட்டைகள் கூடிய குச்சி வழங்குவது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story