இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை

திருப்புவனம்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருப்பாச்சேத்தி கிளை கூட்டம் வீரபத்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் மோகன், ஒன்றிய பொருளாளர் ஜெயபிரகாஷ், உறுப்பினர்கள் ஞானசேகரன், தங்கராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், சந்தை ஊருணியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும். திருப்பாச்சேத்தி ஊராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும். திருப்பாச்சேத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு-பகலாக பணியாற்ற நிரந்தரமாக மருத்துவர், செவிலியர்களை நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story