திருப்புவனம் பேரூராட்சி சாதாரண கூட்டம்
திருப்புவனம் பேரூராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது.
திருப்புவனம்,
திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சியின் சாதாரண கூட்டம் அதன் தலைவர் சேங்கைகைமாறன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ரகமத்துல்லாகான் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ஜெயராஜ் அனைவரையும் வரவேற்றார். கூட்டம் ஆரம்பித்தவுடன் அனைவரும் எழுந்து நின்று புகையில்லா பொங்கல் குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தீர்மானங்களை இளநிலை உதவியாளர் நாகராஜன் வாசித்தார்.
சாலையில் சுற்றித்திரியும் கோவில் மாடுகளை பிடிப்பது பற்றிய தீர்மானம் வாசிக்கும் போது மாடுகளை பிடிப்பது குறித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதன் நகலை மன்றத்தின் பார்வைக்கு வைக்க வேண்டும் என கோஷம் போட்டு உறுப்பினர்கள் அயோத்தி, பாரத்ராஜா, செல்வராஜ், வெங்கடேஸ்வரி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். பின்பு மற்ற தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு அனைத்தும் நிறைவேற்றப்பட்டது.