காரிமங்கலம் பேரூராட்சி மன்ற கூட்டம்
தர்மபுரி
காரிமங்கலம்:
காரிமங்கலம் பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் மனோகரன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ஆயிஷா, துணைத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் காரிமங்கலம் பேரூராட்சியில் சந்தை மேம்பாட்டு பணிக்காக ரூ.2 கோடியே 13 லட்சமும், உழவர் சந்தை பணிக்காக ரூ.57 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது உள்பட பலவேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வார்டு கவுன்சிலர்கள் மாதப்பன், சதீஷ்குமார், சுரேந்திரன், சிவகுமார், நாகம்மாள், இந்திராணி, கீதா, சக்தி, பிரியா, ராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story