சமையல் எரிவாயு முகவர்கள் குறைதீர் கூட்டம்


சமையல் எரிவாயு முகவர்கள் குறைதீர் கூட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

எரிவாயு முகவர்களுடன் குறைதீர்க்கும் கூட்டம் நாளை(திங்கட்கிழமை) நடக்கிறது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை, ராஜசிங்கமங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு வினியோகம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதற்காக எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு முகவர்களுடன் குறைதீர்க்கும் கூட்டம் நாளை(திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடக்கிறது.

அதன்படி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம்.

இந்த தகவலை மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தெரிவித்து உள்ளார்.


Next Story