தர்மபுரியில் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் ஆலோசனை கூட்டம்


தர்மபுரியில் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரி விவேகானந்தா யோகா மையத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் வேலூர் மண்டலத்தில் வருகிற ஜூன் 11-ந் தேதி நடக்க இருக்கும் ஹரிவராசனம் நூற்றாண்டு விழா குறித்து விவாதிக்கப்பட்டது. மாநில தலைவர் வி.ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் எஸ்.நாகராஜன் முன்னிலை வகித்தார். சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மக்கள் தொடர்பு செயலாளராக கே.சிவகுமார் என்கிற ரஜினி சிவா, மாவட்ட தலைவராக ஜி.ராஜமாணிக்கம், மாவட்ட செயலாளராக எம்.ராஜகோபால், மாவட்ட பொருளாளராக ஆர்.வினோ, மாவட்ட துணைத் தலைவராக பி.சுரேஷ், மாவட்ட இணை செயலாளர்களாக பி.தங்கராஜ், ஆர்.மணிவண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். வேலூர் மண்டலத்தில் நடைபெறும் ஹரிவராசனம் நூற்றாண்டு விழாவில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த குருசாமிகள், அய்யப்ப பக்தர்கள், ஆன்மீக நண்பர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


Next Story