மண்டபம் யூனியன் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்
மண்டபம் யூனியன் ஒன்றிய கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் நடைபெற்றது.
பனைக்குளம்,
மண்டபம் யூனியன் ஒன்றிய கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் உச்சிப்புளி யூனியன் அலுவலக கட்டிட கூட்ட அரங்கில் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் யூனியன் ஆணையாளர ்நடராஜன், யூனியன் துணை தலைவர் பகவதிலட்சுமிமுத்துக்குமார் முன்னிலை வகித்தனர். செலவின பட்டியலை அலுவலக உதவியாளர் சரவணன் வாசித்தார். நிகழ்ச்சியின் முடிவில் கலந்து கொண்ட கவுன்சிலர்களின் விவாதங்கள் நடைபெற்றன. தொடர்ந்து வேதாளை ஒன்றிய கவுன்சிலர் தவ்பீக் அலி, யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், ஆணையாளர் நடராஜனை சந்தித்து வேதாளை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பெரியார் சமத்துவபுரம் உள்ளன. இங்கு வசிக்கக்கூடியவர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதி வேண்டி கோரிக்கை மனுகொடுத்தார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். கூட்டத்தில் நித்யா, சபியாராணி, முத்துச்செல்வம், மாரியம்மாள், சுகந்தி சோமசுந்தரம், தவ்பிக்அலி, லட்சுமி, அலெக்ஸ், உஷாலட்சுமி, டிரோஸ், பேரின்பம் உள்ளிட்ட கவுன்சிலர்கள் மற்றும் யூனியன் அலுவலர்கள், பொறியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அலுவலக மேலாளர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.