பா.ஜ.க. சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டம்


பா.ஜ.க. சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டம்
x
தினத்தந்தி 19 April 2023 12:15 AM IST (Updated: 19 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாயல்குடியில் பா.ஜ.க. கடலாடி தெற்கு ஒன்றியம் சார்பாக சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

சாயல்குடி,

சாயல்குடியில் பா.ஜ.க. கடலாடி தெற்கு ஒன்றியம் சார்பாக சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கடலாடி பா.ஜ.க. தெற்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய பொது செயலாளர் குமரன், பால்ராஜ், ஒன்றிய துணை தலைவர்கள் பன்னீர்செல்வம், தர்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பூத் கமிட்டி அமைத்தல், உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் ஒன்றிய இளைஞரணி தலைவர் அருள் மணிகண்டன், இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் சத்ய பிரபாகரன், விவசாய அணி மாவட்ட பார்வையாளர் திரவிய பாண்டியன், ஆன்மிக மேம்பாட்டு பிரிவு ஒன்றிய தலைவர் விஸ்வநாத், விவசாய அணி ஒன்றிய தலைவர் ராமர், சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கன்னிராஜபுரம் பாலகுமார், நரிப்பையூர் ஆறுமுகம், அவத்தாண்டை முருகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


Next Story