துவாரகாபுரியில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. பங்கேற்பு


துவாரகாபுரியில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
x
தினத்தந்தி 26 Jun 2023 1:15 AM IST (Updated: 26 Jun 2023 8:48 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் பெரியமுத்தூர் ஊராட்சி துவாரகாபுரியில் நடந்தது. கிழக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சிவன் வரவேற்றார். நிர்வாகிகள் நாராயணன், ஜெயராமன், பழனி, கோபாலகிருஷ்ணன், நாராயணசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அவர்கள் பேசும் போது, தி.மு.க.வின் 2 ஆண்டு ஆட்சியில் மக்களுக்காக மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார். இந்த அரசுக்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறினர்.

இதில் மாநில விவசாய துணை செயலாளர் டேம் வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர்கள் சாவித்திரி கடலரசு மூர்த்தி, கோவிந்தசாமி, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மகேந்திரன், கவுன்சிலர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story