ஓசூரில் ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுக்குழு கூட்டம்


ஓசூரில் ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 26 Jun 2023 1:15 AM IST (Updated: 26 Jun 2023 8:47 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுக்குழு கூட்டம் ஓசூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாநில தலைவர் காசி விஸ்வநாதன் தலைமை தாங்கினார். பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர் லகுமையா கொடியேற்றி வைத்து பேசினார். இதில், ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் அமர்ஜித் கவுர், தேசிய துணைத்தலைவர் சுப்பராயன், தேசிய துணைத்தலைவர் வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. வாழ்த்தி பேசினார். ஏ.ஐ.டி.யு.சி. தேசிய செயலாளர்கள் மூர்த்தி, வஹிதா நிஜாம், துணைத்தலைவர்கள் ஆறுமுகம், ஆதிமூலம், செயலாளர்கள் சந்திரகுமார், ஆறுமுகம், பாஸ்கர், பொருளாளர் பீட்டர் துரைராஜ் மற்றும் நிர்வாக குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில், கிருஷ்ணகிரி மாவட்ட பொதுச் செயலாளர் செயலாளர் மாதையன் நன்றி கூறினார்.

இந்த கூட்டத்தில், சாலையோர வியாபாரிகளை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் மற்றும் போலீசார் முன்னறிவிப்பும் இன்றி அப்புறப்படுத்துவதை கை விட வேண்டும். அவர்களது வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் மாற்று இடங்கள் ஒதுக்கிட வேண்டும். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story