நாமகிரிப்பேட்டை பேரூராட்சி கூட்டம்


நாமகிரிப்பேட்டை பேரூராட்சி கூட்டம்
x
தினத்தந்தி 1 July 2023 12:30 AM IST (Updated: 1 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமகிரிப்பேட்டை:

நாமகிரிப்பேட்டை தேர்வுநிலை பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி கூட்டரங்கில் நடந்தது. பேரூராட்சி தலைவர் சேரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அன்பழகன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ஆறுமுகம் அரசு வழங்கியுள்ள நிதிகள் மூலம் மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்றும் பணி, பொதுமக்களின் அடிப்படை வசதிகள், சுகாதார வசதிகள் நடைபெற்று குறித்து பேசினார். தொடர்ந்து அனைத்து நலத்திட்ட பணிகளையும் விரைவில் முடிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் 18 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story