நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரிகள் கூட்டம்
நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
சிவகாசி,
சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் மண்டல அளவிலான நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரிகள் மீள்பார்வை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சென்னை தொழில் நுட்ப கல்வி இயக்ககம் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் நந்தகுமார் தலைமை தாங்கினார். பல்வேறு கல்லூரிகளில் இருந்து வந்திருந்த 60 நாட்டு நலப்பணித்திட்ட அலகின் பொறுப்பாசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சென்ற ஆண்டில் நடைபெற்ற நாட்டுநலப்பணிதிட்ட முகாம்கள் மற்றும் வரவு- செலவு பற்றி மீள்பார்வை செய்யப்பட்டது. இதில் கல்லூரியின் நாட்டுநலப்பணிதிட்ட அதிகாரி கவிதாமணி வரவேற்று பேசினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலகின் பொறுப்பாசிரியர்கள் உத்தாணுமல்லையன், கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story