மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
மயிலாடுதுறையில் மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை கோட்ட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு நாகை மேற்பார்வை பொறியாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மயிலாடுதுறை கோட்டத்துக்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரிவித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மேற்பார்வை பொறியாளர் சதீஷ்குமார் தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் கடந்த மாதம் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். கூட்டத்தில் உதவி கோட்ட பொறியாளர் கலியபெருமாள் மற்றும் உதவி பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.