வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு கூட்டம்


வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு கூட்டம்
x

வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு கூட்டம் தஞ்சையில் நடந்தது

தஞ்சாவூர்
தெற்கு மண்டல அகில இந்திய வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு மற்றும் தஞ்சை வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு சார்பில் 75-வது சுதந்திர தின வழா, தஞ்சை கூட்டமைப்பின் 25-ம் ஆண்டு விழா, ஆலோசனை கூட்டம் ஆகிய முப்பெரும் விழா தஞ்சையில் 2 நாட்கள் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தெற்கு மண்டல தலைவர் அமரேந்தர் தலைமை தாங்கினார். சத்தியநாராயணா, பாஸ்கர், முன்னாள் தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சையை சேர்ந்த ஆனந்தன் வரவேற்றார். தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜாபோன்ஸ்லே கலந்து கொண்டு பேசினார்.

6 மாநில நிர்வாகிகள்

இதில் புதுச்சேரி, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களிலும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் 12 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. விழா ஒருங்கிணைப்பாளர் ஆடிட்டர் ரவிச்சந்திரன் நிறைவுரையாற்றினார்.

நீட்டிக்க வேண்டும்

கூட்டத்தில், 2021-22-ம் வருமானவரி படிவம் ஆன்லைன் தாக்கல் செய்வதை ஏப்ரல் மாதத்திலேயே கொண்டு வராமல் ஜூன் 20-ந்தேதி முதல் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே படிவம் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான ஜூலை 31-ந் தேதியை டிசம்பர் 31-ந்தேதிக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் வருமானவரி படிவம் தாக்கல் பதிவு செய்வதில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் 75-வது சுதந்திரதின விழாவை கொண்டாடும் வகையில் தஞ்சை பெரியகோவிலுக்கு வெளியே கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் மஞ்சள்பை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முடிவில் கிருஷ்ணமோகன் நன்றி கூறினார்.





Next Story