ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்க கூட்டம்


ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்க கூட்டம்
x

ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்க கூட்டம் வேப்பந்தட்டையில் நடைபெற்றது.

பெரம்பலூர்

ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்க கூட்டம் வேப்பந்தட்டையில் நடைபெற்றது. இதற்கு வட்டார தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக வேப்பந்தட்டை வட்டார கிளை கருவூல அதிகாரி சித்ரா கலந்துகொண்டு ஓய்வூதியர்கள் தங்கள் பென்சன் புத்தகத்தை எடுத்துவந்து கருவூலத்தில் நேர்காணல் விவரம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் இக்கூட்டத்தில் கருவூல கண்காணிப்பாளர் பொற்செல்வி, கணக்கர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். வட்டார செயலாளர் சையத் பாஷா ஜான் வரவு-செலவு அறிக்கையை வாசித்தார். கூட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் திரளாக கலந்துகொண்டனர். முன்னதாக ஓய்வு பெற்ற ஆசிரியர் ரெங்கநாயகம் வரவேற்றார். முடிவில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வரதராஜன் நன்றி கூறினார்.


Next Story