குழந்தைகள் பாதுகாப்பு குறி்த்த கூட்டம்
குழந்தைகள் பாதுகாப்பு குறி்த்த கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை
அன்னவாசல் அருகே குடுமியான்மலையில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நலபாதுகாப்பு அலுவலக ஆற்றுபடுத்துனர் ரமாபிரியா கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்துருக்கள், பெண் கல்வி ஊக்குவித்தல், பெண் குழந்தைகளின் இளவயது திருமணங்களை தடுத்தல், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, பெண் குழந்தைகளின் பாலியல் குற்றங்கள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்குதல் மற்றும் கல்வி வழங்குதல், போன்ற கருத்துருக்களை எடுத்துரைத்தார். கூட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவிகள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள், வளர் இளம் பெண்கள், இளைஞர் மன்றத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story