வளர்ச்சி இலக்கு தொடர்பான கூட்டம்


வளர்ச்சி இலக்கு தொடர்பான கூட்டம்
x
தினத்தந்தி 12 Jan 2023 12:15 AM IST (Updated: 12 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

வளர்ச்சி இலக்கு தொடர்பான கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில், நீடித்த நிலையான வளர்ச்சி இலக்கு தொடர்பாக மாவட்ட அளவிலான பயிற்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளை வட்டார மற்றும் கிராம பஞ்சாயத்து அளவில் பரவலாக்கல் தொடர்பான பயிற்சி மற்றும் விளக்க உரை வழங்கப்பட்டது. இந்த பயிற்சியினை மாவட்ட திட்ட அலுவலக மற்றும் மாவட்ட புள்ளி இயல் அலுவலக அலுவலர்கள் இணைந்து அளித்தனர்.

பயிற்சியில் ஐக்கிய நாடுகள் சபையினால் நிர்ணயிக்கப்பட்ட 17 இலக்குகள் மற்றும் குறிக்காட்டிகளின் அடிப்படையில் தேசிய, மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவிலான குறிக்காட்டிகள் குறித்த விவரம், அதன் அடிப்படையில் அனைத்து நிலையிலும் தரவரிசைப்படுத்துதல் மற்றும் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் சார்ந்த புள்ளி விவரங்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. முடிவில் மாவட்ட கலெக்டர் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளின் முக்கியத்துவம், உரிய காலக்கெடுவிற்குள் இலக்குகளை அடைய நடவடிக்கை எடுத்தல் மற்றும் சரியான புள்ளி விவரங்களை அளிக்க வேண்டுமென அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், ஆர்.டி.ஓ.க்கள் துரைசாமி (ஊட்டி), பூஷணகுமார் (குன்னூர்), முகம்மது குதுரதுல்லா(கூடலூர்), கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், புள்ளியியல் துறை உதவி இயக்குனர் தனபாலன், புள்ளி இயல் துறை அலுவலர்கள் வெங்கடேசன், சசிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story