புதிய பாரத எழுத்தறிவு திட்டம் குறித்த கூட்டம்


புதிய பாரத எழுத்தறிவு திட்டம் குறித்த கூட்டம்
x

திருப்பத்தூரில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் குறித்த கூட்டம் நடந்தது.

திருப்பத்தூர்

தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு 'கற்போம் எழுதுவோம்' திட்டம் 2020 முதல் 2022 வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியங்களில் செயல்படுத்தப்பட்டது. இத் திட்டம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2027 வரை செயல்படுத்தப்பட உள்ளது.

மாவட்டத்தில் 6 ஒன்றியங்களில் 8,111 நபர்களுக்கு இந்த ஆண்டு அடிப்படை எழுத்தறிவை கற்பிக்கும் நோக்கத்தோடு, வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்த கூட்டம் திருப்பத்தூர் மாதிரி மேல்நிலை பள்ளியில் நடந்தது. கூட்டத்திற்கு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இணை இயக்குனர் சசிகலா தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் பிரபாகரன், மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், அனைத்து ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திட்டம் சார்ந்த செயல்பாடுகளை பள்ளி அளவில் நடைமுறைப்படுத்த ஆலோசிக்கப்பட்டது.


Next Story