செட்டிகுளத்தில் மத்திய பா.ஜனதா அரசின் சாதனை விளக்க கூட்டம்


செட்டிகுளத்தில் மத்திய பா.ஜனதா அரசின் சாதனை விளக்க கூட்டம்
x
தினத்தந்தி 8 Nov 2022 12:15 AM IST (Updated: 8 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

செட்டிகுளத்தில் மத்திய பா.ஜனதா அரசின் சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் ஒன்றிய பா.ஜனதா சார்பில் செட்டிக்குளத்தில் மத்திய பா.ஜனதா அரசின் 8 ஆண்டுகள் சாதனை விளக்க பதாதை திறப்பு விழா மற்றும் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவுக்கு ஒன்றிய தலைவர் எஸ்.கே சரவணன் தலைமை வகித்து, பதாதையை திறந்து வைத்து கட்சி கொடியேற்றினார். சாத்தான்குளம் ஒன்றிய செயலர் கே. கணேசன், சாத்தான்குளம் நகரத் தலைவர் து. ஜோசப் ஜெபராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை தலைவர் சுந்தரவேல் வரவேற்றார். இதில் ஒன்றிய வர்த்தக பிரிவு தலைவர் ஜெ. ஜெய ராஜேஷ், ஒன்றிய பொருளாளர் அகத்தீஸ்வரன், மாவட்ட நெசவாளர் பிரிவு துணைத் தலைவர் சுடலைக்கண், மூத்த நிர்வாகி பட்டுபெருமாள், ஒன்றிய நெசவாளர் பிரிவு தலைவர் சுடலையாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய துணைத் தலைவர் ராஜகோபால் நன்றி கூறினார்.


Next Story