400 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
திருவாரூர் மாவட்டத்தில் நாளை 400 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடக்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் நாளை 400 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடக்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று மீண்டும் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் திருவாரூர் மாவட்டத்தில் நாளை(ஞாயிறுக்கிழமை) 400 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்டவர்கள், இதுநாள் வரை கொரோனா தடுப்பூசி எடுத்து கொள்ளாதவர்கள், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
முன்கள பணியாளர்கள்
மேலும், முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை ஊக்குவிப்பு தவணை கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. ஆகவே, முன் களப்பணியாளர்கள் மற்றும் இணை நோய் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் 6 மாதங்கள் கடந்தவர்கள் இந்த தடுப்பூசி முகாமில் முன்னெச்சரிக்கை ஊக்குவிப்பு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
400 இடங்களில்...
பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய அளவில் அவர்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே கொரோனா தடுப்பூசி முகாம்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை செயல்படும் மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் 242 இடங்களிலும், நகராட்சிகளில் 40 இடங்களிலும், பேரூராட்சிகளில் 18 இடங்களிலும், 50 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 8 அரசு ஆஸ்பத்திரிகளிலும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, மாவட்ட கலெக்டர் அலுவலகம், 40 நடமாடும் கொரோனா தடுப்பூசி குழு என மொத்தம் 400 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.
கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ளது. எனவே நம்மையும், நமது சமுதாயத்தையும் பாதுகாத்து கொள்ள அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.