மேல்நகர் பள்ளி மாணவர்கள் வெற்றி
மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் மேல்நகர் பள்ளி மாணவர்கள் வெற்றி ெபற்றனர்.
திருவண்ணாமலை
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அருகே மேல்நகர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர்.
இதில் குவாஷ் போட்டியில் முதலிடம் பெற்று, மாநில அளவில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர்.
மேலும் மேஜைப்பந்து, கோ கோ போட்டிகளில் இரண்டாமிடம் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் அருளரசு, உதவி தலைமை ஆசிரியர் ஹரிதாஸ், ஆசிரியர்கள் சுப்பிரமணியன், கண்ணபெருமாள், ஜெகதீஷ்சந்திரபோஸ் உள்பட ஆசிரியர்கள் பாராட்டினர்.
மேலும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் வனமயில், கலா ஆகியோரையும் பாராட்டினர்.
Related Tags :
Next Story