ஒரு வார்டுக்கு உறுப்பினர் தேர்தல்


ஒரு வார்டுக்கு உறுப்பினர் தேர்தல்
x

மேலப்பாவூர் பஞ்சாயத்தில் ஒரு வார்டுக்கு உறுப்பினர் தேர்தல்- ஜூலை 9-ந் தேதி நடக்கிறது

தென்காசி

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் யூனியன் மேலப்பாவூர் பஞ்சாயத்து 1-வது வார்டு உறுப்பினர் நாராயணன் என்பவர் காலமானதையொட்டி, அதற்கு பதில் புதிய உறுப்பினரை தேர்வு செய்வதற்கான தற்செயல் தேர்தல் ஜுலை 9-ந் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று மேலப்பாவூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் தொடங்கியது. வருகிற 27-ந்தேதி மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம், 28- ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 30-ந் தேதி மாலை 3 மணி வரை மனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம்.

தேர்தலில் போட்டி இருந்தால் ஜுலை 9-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை மேலப்பாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு நடைபெறும். ஜுலை 12-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்த பஞ்சாயத்து பகுதியில் தேர்தல் விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது என்று தேர்தல் நடத்தும் அலுவலரும், கீழப்பாவூர் யூனியன் ஆணையாளருமான பா.கண்ணன் தெரிவித்தார்.

இதற்கான விவரங்களை பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு ஒட்டி வைத்தனர்.



Next Story