அன்புமணிராமதாஸ் எம்.பி.க்கு சிறப்பான வரவேற்பு


அன்புமணிராமதாஸ் எம்.பி.க்கு சிறப்பான வரவேற்பு
x

திருவிடைமருதூருக்கு வருகை தரும் அன்புமணிராமதாஸ் எம்.பி.க்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று பா.ம.க., வன்னியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்,

திருவிடைமருதூருக்கு வருகை தரும் அன்புமணிராமதாஸ் எம்.பி.க்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று பா.ம.க., வன்னியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

ஆலோசனை கூட்டம்

திருவிடைமருதூரில் தஞ்சை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் தி. ஜோதிராஜ் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில தலைவர் கோ. ஆலயமணி, வன்னியர் அறக்கட்டளை வளர்ச்சி குழு செயலாளரும் ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம. க. ஸ்டாலின், மாநில மகளிர் அணி செயலாளர் பானுமதி சத்யமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் கோதை கேசவன் உள்ளிட்டோர் பேசினர்.

10 ஆயிரம் பேர்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-திருவிடைமருதூரில் ஜூன் 8-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில், அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசுகிறார். எனவே திருவிடைமருதூருக்கு வரும் அன்புமணிராமதாஸ் எம்.பி.க்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, திருவிடைமருதூரில் நடைபெறும் கூட்டத்தினை சிறப்பாக நடத்துவது, இக்கூட்டத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,கூட்டத்தில் பா.ம.க. தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் அமிர்த கண்ணன், தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் சங்கர், உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள் மதிவிமல், ராம்குமார், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் வினோத் சுந்தரம், பா.ம.க. தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் சரவணன், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் நெடார் ராஜசேகர், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கஞ்சனூர் முருகன், எம்.ஏ.குமார், சமூக முன்னேற்ற சங்க பொறுப்பாளர் முத்தூர் சுவாமிநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனர்.


Next Story