உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி செயல்பட வேண்டும்


உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி செயல்பட வேண்டும்
x

மன்னாா்குடி நகர மேம்பாட்டுக்கு உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி செயல்பட வேண்டும் என்று நகரசபை தலைவர் கூறினார்.

திருவாரூர்

கோட்டூர்;

மன்னாா்குடி நகர மேம்பாட்டுக்கு உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி செயல்பட வேண்டும் என்று நகரசபை தலைவர் கூறினார்.

நகரசபை கூட்டம்

மன்னார்குடி நகர சபை கூட்டம் தலைவர் மன்னை த.சோழராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 61 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் உறுப்பினர்கள் பல்வேறு கோாிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதன் விவரம் வருமாறு:-திருச்செல்வி: ஆர்.பி. சிவம் நகர் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் தெருவுக்கு மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும்.சா.புகழ்: எங்கள் வார்டில் குடிநீர் வினியோகத்திற்கு மினி பவர் டேங்க் அமைத்ததற்கு தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குடிநீர் குழாயில் மின்மோட்டார் வைத்து குடிநீர் உரிஞ்சிவதை தடுக்கவும் அனுமதி இல்லாமல் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதை குழு அமைத்து முறைப்படுத்த வேண்டும். தேவையான இடங்களில் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்ய வேண்டும்.

மழைநீர் வடிகால்

பாரதிமோகன்: ஈமக்கிரியை மண்டப பராமரிப்பு பணிகளை மேற்கொண்டதற்கு மண்டபம் எதிர்புறம் பேவர் பிளாக் சாலை அமைத்ததற்கும் மார்டன்நகர் ராமையா நகர் பகுதியில் மின் இணைப்பு பெற நடவடிக்கை எடுத்தற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மார்டன் நகர் ராமையா நகர் பகுதியில் மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும்.ரா.கைலாசம் (நகர்மன்றத் துணைத் தலைவர்): திருப்பாற்கடல் குளம் கரைகளை சுத்தம் செய்து பொதுமக்கள் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடுவதற்கும் அதன் அருகில் சாலையோர பூங்கா அமைத்ததற்கும் நரிக்குறவர் காலனி பகுதியில் மழை நீர் வடிவதற்கு வடிகாலில் குழாய் அமைத்து பணிகளை சீரமைத்ததற்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

கட்சி பேதமின்றி

சூரியகலா: யானை விழுந்தான் குளம் மற்றும் பெத்தபெருமாள் கோவில் குளங்களுக்கு படித்துறை கட்டித்தர வேண்டும்.மன்னை சோழராஜன் (நகர்மன்ற தலைவர்): நகராட்சி பகுதிகளில் நடைபெறும் ருக்மணி குளம் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் பணிகள் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு அதன் பின்னரே பட்டியல் தொகை வழங்கப்படும். நகர்மன்ற உறுப்பினர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு நேரில் சந்தித்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ கேட்டு தெளிவு பெறலாம். நமது எம்.எல்.ஏ.வின் முயற்சியால் தமிழக முதல்-அமைச்சர் மன்னார்குடி நகர மேம்பாட்டுக்கு அளித்த திட்டங்களான ஒருங்கிணைந்த நவீன பஸ் நிலையம், பாதாள சாக்கடை திட்டம், குளங்கள் மேம்பாடு, பூங்காக்கள் மேம்பாடு, புதிய தினசரி நாளங்காடி, குளங்களை இணைக்கும் திட்டம், புதியபாலம் மற்றும் கர்த்தநாதபுரம் பாலங்கள் அமைக்கும் திட்டம் மற்றும் பல புதிய திட்டங்கள் செயல்பட உள்ளது. மன்னார்குடி நகர மேம்பாட்டுக்கு உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி ஒன்றிணைத்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story