ஆய்வுக்கூட்டத்தை புறக்கணித்து உறுப்பினர்கள் வெளிநடப்பு


ஆய்வுக்கூட்டத்தை புறக்கணித்து உறுப்பினர்கள் வெளிநடப்பு
x

ஆய்வுக்கூட்டத்தை புறக்கணித்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

புதுக்கோட்டை

விராலிமலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ரவி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் விராலிமலை ஊராட்சியில் உள்ள 12 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதில் விராலிமலை ஊராட்சியில் உள்ள அடிப்படை பிரச்சினைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது வார்டு உறுப்பினர்கள் சிலர் தங்களது பகுதிகளுக்கு எந்த ஒரு அடிப்படை பிரச்சினைக்கான தீர்வுகளை இதுவரை ஊராட்சி நிர்வாகம் செய்யவில்லை என கூறி ஊராட்சி மன்ற தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு எட்டாததையொட்டி வார்டு உறுப்பினர்கள் 8 பேர் ஆய்வுக்கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து அவர்கள் ஊராட்சி மன்ற நுழைவுவாயிலில் நின்று வார்டு உறுப்பினர்களை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், நகராட்சிக்கு இணையாக மக்கள்தொகை உள்ள இந்த விராலிமலை ஊராட்சியில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளை களைய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் கூறுகையில், இதுவரை ஒருதலைபட்சமாக நான் செயல்பட்டதில்லை. இருப்பினும் வார்டு உறுப்பினர்களின் கோரிக்கை இதுெவனில் இனிவரும் காலங்களில் ஊராட்சிக்கு ஒதுக்கப்படும் நிதியினை 12 வார்டுகளுக்கும் பகிர்ந்து அந்தந்த வார்டுகளின் தேவைகளுக்கு ஏற்ப நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.


Next Story