காலிக்குடங்களுடன் வந்த உறுப்பினர்கள்


காலிக்குடங்களுடன் வந்த உறுப்பினர்கள்
x

குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க வலியுறுத்தி உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி மன்ற கூட்டத்துக்கு உறுப்பினர்கள் காலிக்குடங்களுடன் கலந்து கொண்டனர்.

திருவாரூர்

தில்லைவிளாகம்:

குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க வலியுறுத்தி உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி மன்ற கூட்டத்துக்கு உறுப்பினர்கள் காலிக்குடங்களுடன் கலந்து கொண்டனர்.

ஊராட்சி மன்ற கூட்டம்

முத்துப்பேட்டை தாலுகா உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா மகேந்திரன் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் 5-வது வார்டு உறுப்பினர் தாஜுதீன், 6-வது வார்டு உறுப்பினர் அஜிரன் அலிமா காதர், 8-வது வார்டு உறுப்பினர் ராயல் காதர் ஆகியோர் தங்கள் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடை தீர்க்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் கலந்து கொண்டனர்.

வாக்குவாதம்

பின்னர் 3 உறுப்பினர்களும், ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா மகேந்திரனிடம் சென்று கடந்த 3½ ஆண்டுகளாக எங்கள் வார்டு பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க என்ன நிரந்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எங்கள் வார்டுகளில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை வேறு பிரச்சினை குறித்து கூட்டத்தில் பேசவிட மாட்டோம் என்றனர்.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா மகேந்திரன் கூறுகையில், குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளை ஆய்வு செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

பரபரப்பு

முன்னதாக 3 உறுப்பினர்களும் தங்கள் வார்டுகளில் இருந்து காலிக்குடங்களுடன் ஊர்வலமாக ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வந்தனர்.ஊராட்சி மன்ற கூட்டத்துக்கு 3 உறுப்பினர்கள் காலிகுடங்களுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story