முறைசாரா தொழிலாளர்கள் உறுப்பினர் சேர்க்கை முகாம்
தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் முறைசாரா தொழிலாளர்கள் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
தூத்துக்குடி
தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் முறைசாரா தொழிலாளர்களுக்கு ஐ.என்.டி.யூ.சி. சங்கத்தின் மூலம் இலவச உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. முகாமை முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், ஐ.என்.டி.யூ.சி. மாநில அமைப்பு செயலாளருமான பெருமாள்சாமி தொடங்கி வைத்தார். இதில் தி.மு.க. பகுதி செயலாளர் சிவக்குமார், ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் ராஜகோபால், துறைமுக ஐ.என்.டி.யூ.சி. தலைவர் சந்திரசேகர், சிக்கன நாணய ஐ.என்.டி.யூ.சி. தலைவர் பால்ராஜ், துறைமுக ஐ.என்.டி.யூ.சி. அருளானந்தம், பூம்புகார் ஐ.என்.டி.யூ.சி. மாரிமுத்து, தையல் ஐ.என்.டி.யூ.சி. மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story