தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம்


தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
x
தினத்தந்தி 8 Jun 2023 7:17 PM IST (Updated: 9 Jun 2023 7:12 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம், வாரத்தில் 3 நாட்கள் நடைபெறுகிறது என்று தேனி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சிவக்குமார் ெதரிவித்துள்ளார்.

தேனி

தேனி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நலவாரியம், தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுனர்கள் நலவாரியம் ஆகியவற்றில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான சிறப்பு முகாம், தேனி மாவட்ட கலெக்டரின் அறிவுரையின்படி தேனி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன், வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளது. இம்முகாமில் திங்கட்கிழமை தோறும், தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுனர்கள் நலவாரியத்திலும், புதன்கிழமை தோறும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்திலும், வெள்ளிக்கிழமை தோறும் தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நலவாரியத்திலும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற உள்ளது. முகாமில் உறுப்பினர்களாக பதிவு செய்ய வரும் தொழிலாளர்கள் தங்களுடைய செல்போன் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்திருக்க வேண்டும். பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 2, ஆதார் அடையாள அட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம், ரேஷன் கார்டு, வயது தொடர்பான ஆவணங்களாக பிறப்புச் சான்று, பள்ளிச் சான்று, ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் அசலுடன் நேரில் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story