தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்


தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்
x

பி.பள்ளிப்பட்டி ஊராட்சியில் தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் பி.பள்ளிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிறிஸ்தவ தெரு உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இந்த முகாமிற்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி, தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பழனியப்பன், ஒன்றிய செயலாளர்கள் சரவணன், முத்துக்குமார், நிர்வாகி சத்யமூர்த்தி, ஊராட்சி தலைவர் திருமலா தினேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சந்திரமோகன், பொ.மல்லாபுரம் பேரூர் செயலாளர் கவுதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் ஏராளமான இளைஞர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்து தி.மு.க.வில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் ஜெயசந்திரன், ஒன்றியக்குழு தலைவர் உண்ணாமலை குணசேகரன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயக்குமார், நிர்வாகி விஜயன், ஊராட்சி தலைவர்கள் அன்பழகன், சாந்தா குப்புசாமி, சிவகாமி செல்வம், விஜயன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கவுதம், தொகுதி ஒருங்கிணைப்பாளர் கோகுல்நாத், இணை ஒருங்கிணைப்பாளர் சண்முகம், மாவட்ட பிரதிநிதி ரவி, ஒன்றிய துணை செயலாளர்கள் செல்வம், செரிப், ஆலாபுரம் வடிவேல், ராஜாராம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மதன்குமார், பி.பள்ளிப்பட்டி கிளை செயலாளர்கள் ராஜேந்திரன், ஜனா செல்வநாயகம், செல்வி, ஸ்டாலின், மணிகுமார், பொன்மணி, அண்ணாதுரை, அந்தோணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story