கோவில்பட்டியில் நினைவு தினம் அனுசரிப்பு;இமானுவேல் சேகரன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


கோவில்பட்டியில் நினைவு தினம் அனுசரிப்பு;இமானுவேல் சேகரன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 12 Sept 2023 12:15 AM IST (Updated: 12 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் நினைவு தினத்தை முன்னிட்டு இமானுவேல் சேகரன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி (கிழக்கு):

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி, கோவில்பட்டியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தி.மு.க.-அ.தி.மு.க.

சுதந்திர போராட்ட தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு நகர தி.மு.க. செயலாளரும், நகரசபை தலைவருமான கருணாநிதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்தானம், பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், அறங்காவலர் உறுப்பினர் சண்முகராஜ், மாவட்ட கவுன்சிலர் தங்க மாரியம்மாள், அவைத்தலைவர்கள் பொன்னுசாமி, முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ் தலைமையில் நகரமன்ற உறுப்பினர் கவியரசன் முன்னிலையில், இம்மானுவேல் சேகரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பாண்டவர்மங்கலத்தில் உள்ள இம்மானுவேல் சேகரன் மணிமண்டபத்தில் உள்ள படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் தெற்கு திட்டங்குளத்தில் உள்ள இமானுவேல் சேகரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் மாவட்ட செயலாளர் கதிரேசன், வழக்கறிஞர் அணி மாநில துணை அமைப்பாளர் பெஞ்சமின் பிராங்கிளின், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் கரிசல் சேகர், மாவட்ட செய்தி தொடர்பாளர் மனுவேல் ராஜ், வழக்கறிஞர் அணி பிரிவு துணை அமைப்பாளர் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் விவசாயிகள் சங்க தலைவர் ஆவல்நத்தம் லட்சுமணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன், செயலாளர் வக்கீல் பெஞ்சமின் பிராங்களின், நிர்வாகிகள் சம்பத்குமார், கருப்பசாமி, கலைச்செல்வன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் அபிராமி முருகன், தொழிலதிபர் உத்தண்டராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சி கதிரேசன், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு அருள்தாஸ், வழக்கறிஞர் பாபு, நாம் தமிழர் கட்சி வக்கீல் ரவிக்குமார், ஏ.ஐ.டி.யு.சி. காளிராஜ், மக்கள் நீதி மய்யம் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓட்டப்பிடாரம்

ஒட்டப்பிடாரம் அருகே ஓசனூத்து கிராமத்தில் இமானுவேல் 66-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு அவரது சிலைக்கு கிராம பொதுமக்கள் சிறப்பு பூஜை செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து வீரன் சுந்தரலிங்கனார் பேரவை தலைவர் முருகன் தலைமையில் பொதுச் செயலாளர் தேவேந்திரன் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி தலைவர் கண்ணன், தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி தலைவர் ஆனந்த் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தென்திருப்பேரை

தென்திருப்பேரையில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஆழ்வார்திருநகரி மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் நவின், மள்ளர் பேராயம் தெற்கு மாவட்ட செயலாளர் சரவணன், மேலக்கடம்பா ஊர் தலைவர் பலவேசம், நாம் தமிழர் கட்சி நகர தலைவர் மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நாகலாபுரம்

விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில் இம்மானுவேல் சேகரன் 66-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு இம்மானுவேல் சேகரன் உருவச்சிலைக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் புதூர் தி.மு.க மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story