தூத்துக்குடியில் நினைவுநாள் அனுசரிப்பு:டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை


தினத்தந்தி 20 April 2023 12:15 AM IST (Updated: 20 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவுநாளை ஒட்டி அவரது உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நினைவுநாள்

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி வி.இ.ரோட்டில் வ.உ.சி. காய்கனி மார்க்கெட் காமராஜர் சிலை அருகே தெட்சணமாற நாடார் சங்க முன்னாள் நிர்வாகிகள் சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்ட டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயரும், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினருமான ஜெகன் பெரியசாமி, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி, கலைச்செல்வி, ஆர்தர் மச்சாது மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அ.தி.மு.க.வினர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், அமைப்பு சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் இரா.சுதாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் இரா.ஹென்றி, பகுதி செயலாளர்கள் ஜெய்கணேஷ், முருகன், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் நடராஜன், கே.ஜெ.பிரபாகர், ஜெ.தனராஜ், அருண்ஜெபக்குமார், பில்லா விக்னேஷ், மண்டல தகவல் தொழில்நுட்பப்பிரிவு துணைச் செயலாளர் மந்திரமூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் சத்தியாலட்சுமணன், துணைச் செயலாளர் ஜோதிடர் ரமேஷ்கிருஷ்ணன், நிர்வாகிகள் திருச்சிற்றம்பலம், வக்கீல் சரவணபெருமாள், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், வட்ட செயலாளர்கள் ஜெயக்குமார், நவ்சாத், அந்தோணிராஜ், ஈஸ்வரன், அண்டோ, பூர்ணசந்திரன், மனுவேல்ராஜ், பரிபூரணராஜா, முன்னாள் கவுன்சிலர் பொன்ராஜ், ஈஸ்டர், நிலாசந்திரன், யுவன் பாலா, தாமஸ், பொன்சிங், பாலஜெயம், சாம்ராஜ், கார்திக், மைதீன், சகாயராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அ.தி.மு.க. மாநில அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் அ.தி.மு.க.வினர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஜீவாபாண்டியன், வட்ட செயலாளர் ராஜா, துரைசிங், மாவட்ட பிரதிநிதி அசரியா, முன்னாள் வட்ட செயலாளர்கள் அன்புலிங்கம், கைனஸ், அசோக், சங்கர், அரிகிருஷ்ணன், கோட்டாளமுத்து, மாவட்ட மாணவர் அணி முன்னாள் இணை செயலாளர் துரைப்பாண்டியன், சிறுபான்மை பிரிவு அசன், முன்னாள் கவுன்சிலர் சகாயராஜ், போக்குவரத்து பிரிவு டெரன்ஸ், சங்கர், மாவட்ட தகவல் தொடர்பு பிரிவு இணை செயலாளர் கவுதம்பாண்டியன், கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், இயக்குனர் பாலு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் முத்துக்குட்டி தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டேவிட் பிரபாகரன், மண்டல தலைவர் தங்கராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துவிஜயா, காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மாவட்ட தலைவர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாவட்ட தலைவர் ராஜாராம், மாநில செயலாளர் பிரபு, மீனவர் அணி மிக்கேல்குரூஸ், மற்றும் நிர்வாகிகள் பெத்துராஜ், முத்துராஜ், நேரு, ஏசுதாஸ், உமாமகேசுவரி, பாலசுப்பிரமணியன், முத்துராஜா, ஜான்வெஸ்லி, ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போன்று முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஊடகப்பிரிவு சுந்தர்ராஜ், செல்வம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சமத்துவ மக்கள் கழகம்

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீலு் அந்தோணி பிச்சை டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார், மாவட்ட செயலாளர் டேனியல்ராஜ், சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட துணை செயலாளர்கள் மில்லை தேவராஜ், அருள்ராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ், மாவட்ட வக்கீல் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், மாவட்ட விவசாய அணி செயலாளர் சரவணன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் விக்ரம், மாநகர செயலாளர் உதயசூரியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சமத்துவ மக்கள் கட்சி

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் எம்.எக்ஸ்.வில்சன் தலைமையில் கட்சியினர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி பவர் ராமகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சாமுவேல், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பாரதி வாசன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் த.பா. அருள்ராஜ், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை செயலாளர் திலீப், கிருஷ்ணராஜபுரம் பகுதி இளைஞரணி செயலாளர் கருவேலமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தெட்சணமாற நாடார் சங்க முன்னாள் நிர்வாகிகள் ஜெயக்கொடி, தமிழ்செல்வன், லிங்கசெல்வன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதே போன்று பா.ஜனதா கட்சி மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் வாரியார், மாநகர மத்திய வியாபாரிகள் சங்க தலைவர் விநாயக மூர்த்தி, வக்கீல் சங்க தலைவர் செங்குட்டுவன், வக்கீல் ஜெயச்சந்திரன், நாடார் மகாஜன சங்க மாநகர செயலாளர் வி.வி.சதீஷ்குமார், பகுதி பொறுப்பாளர் செல்வக்குமார், பாண்டியனார் தொழிற்சங்கம் மாவட்ட செயலாளர் வி.சித்திரவிஜயன், தூத்துக்குடி ஒன்றிய டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் ஏ.ரவி நாடார் உள்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மேலும் தொழில் அதிபர்கள் பி.பி.எம்.டி. பொன்குமரன், வரதராஜபாண்டியன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ்

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தூத்துக்குடி தபசு மண்டபம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், மாவட்ட துணை தலைவர்கள் ஜெபராஜ், விஜயராஜ், அருணாசலம், மாவட்ட செயலாளர் கோபால், நாராயணசாமி முத்துராஜ், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் ஜான் சாமுவேல், அமைப்புசாரா தொழிற்சங்க மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன், மண்டல தலைவர்கள் சேகர், ராஜன், செந்தூரப்பாண்டி, வார்டு தலைவர்கள் தனுஷ், முத்துராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ம.தி.மு.க.

தூத்துக்குடி மாநகர ம.தி.மு.க. சார்பில் மாநகர செயலாளர் முருகபூபதி தலைமையில் ம.தி.மு.கவினர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநகர துணை செயலாளர் அனல் டேவிட், மாநில மீனவர் அணி செயலாளர் நக்கீரன், சுந்தரராஜ், செல்லப்பா, பொன்ராஜ், முருகேஷ், மகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் ஏசாதுரை தலைமையில் கட்சியினர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் பழனிசாமிபாண்டியன், அம்மா பேரவை தலைவர் ஆறுமுகதுரை, எம்.ஜி.ஆர். மன்றம் மாரியப்பன், மத்திய வடக்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் ரமேஷ், சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல்லா ஹசன், மத்திய தெற்கு பகுதி இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story