ஓட்டப்பிடாரம் அருகே நினைவுநாள் அனுசரிப்பு:வீரன் சுந்தரலிங்கனார் சிலைக்குமாலை அணிவித்து மரியாதை
ஓட்டப்பிடாரம் அருகே நினைவுநாளை ஒட்டி வீரன் சுந்தரலிங்கனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தப்பட்டது.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கவர்னகிரி வீரன் சுந்தரலிங்கனார் மணி மண்டபத்தில் சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் 224-வது நினைவு நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு கிராம பொதுமக்கள் பால் அபிஷேகம் செய்து பொங்கல் வைத்து கொண்டாடினர். விழாவை முன்னிட்டு அரசு சார்பில் ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார், யூனியன் கூடுதல் ஆணையாளர் ராம்ராஜ் ஆகியோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் மண்டல துணை தாசில்தார் மகாராஜன், வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார், கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜன், மகாராஜன், வீரன் சுந்தரலிங்கனார் நேரடி வாரிசு பொன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், வீரன் சுந்தரலிங்கனார் பேரவை நிறுவனத் தலைவர் முருகன் தலைமையில் செயலாளர் தேவேந்திரன், வீரன் சுந்தரலிங்கனாரின் நேரடி வாரிசு ஆகியோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.