வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கக்கோரி நூதன முறையில் எம்.பி.யிடம் மனு கொடுத்த ஆணழகன்கள்


வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கக்கோரி நூதன முறையில் எம்.பி.யிடம் மனு கொடுத்த ஆணழகன்கள்
x

வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கக்கோரி ஆணழகன்கள் நூதன முறையில் எம்.பி.யிடம் மனு கொடுத்தனர்

மதுரை


தமிழகத்தில் ஆணழகன் துறையில் மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற ஆணழகன்கள் மத்திய அரசின் கீழ் வரும் ரெயில்வே துறை, தபால் துறை, வருமானவரித்துறை, ராணுவ முப்படைகளின் துறையிலும் 100-க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர். இதேபோல் தமிழக அரசு விளையாட்டு துறைக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டில் ஆணழகன் துறையையும் இணைக்க தமிழக முதல்- அமைச்சரிடம் வலியுறுத்த கோரி, மதுரையை சேர்ந்த ஆணழகன்கள் நூதன முறையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசனிடம் மனு ஒன்றை அளித்தனர். இதில் கடந்த வாரம் மதுரை மாவட்ட ஆணழகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாரீஸ்வரன் மற்றும் மதுரை மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பாக சங்கத்தின் பொதுச்செயலாளர் சிவக்குமார், பொருளாளர் பிரவீன் ஆண்ட்ரூஸ், தலைவர் சவுந்திர பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, அங்கு வந்த ஆணழகன்கள் எம்.பி. முன்னிலையில் மினி ஆணழகன் போட்டி நடத்தி மனு அளித்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.


Related Tags :
Next Story