கோவில்பட்டியில் ஆண்களுக்கான ஆக்கிப்போட்டி பரிசளிப்பு விழா


கோவில்பட்டியில் ஆண்களுக்கான ஆக்கிப்போட்டி பரிசளிப்பு விழா
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் ஆண்களுக்கான ஆக்கிப்போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

கோவில்பட்டியிலுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் ஆக்கி போட்டி 2 நாட்கள் நடந்தது. போட்டியில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 கல்லூரி அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் கோவில்பட்டி எஸ். எஸ். டி. எம். கல்லூரி அணியும், கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும் மோதின. இதில் எஸ். எஸ். டி. எம். கல்லூரி அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதலிடத்தை பிடித்தது. 2-வது இடத்தை அரசு கல்லூரி அணி பிடித்தது. 3 மற்றும் 4 வது இடத்திற்கான போட்டியில் கோவில்பட்டி கே. ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும், கோவில்பட்டி ஜி. வி. என். கல்லூரி அணியும் மோதின. இதில் கே.ஆர். கல்லூரி அணி 4 -0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்தது.

இதனைத் தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு கே. ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் கே. ஆர். அருணாச்சலம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக உடற்கல்வி துறை இயக்குனர் ஆறுமுகம் கலந்து கொண்டு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். போட்டி ஏற்பாடுகளை கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சு. மதிவண்ணன் தலைமையில் உடற்கல்வி இயக்குனர்கள் ஆர். ராம்குமார், சிவராஜ், ஆக்கி பயிற்சியாளர் சிவநேசன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story