மனநலம் பாதித்தவர் தூக்குப்போட்டு தற்கொலை


மனநலம் பாதித்தவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 4:04 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே மனநலம் பாதித்தவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி கொணவக்கரை அருகே தப்பக்கம்பை கிராமத்தை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 35). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நாகேந்திரனுக்கு கடந்த ஓராண்டு காலமாக மனநிலை பாதிக்கப்பட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து உள்ளார். இதற்கிடையே மகளுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால், மஞ்சுளா தனது மகளை சிகிச்சைக்காக திருச்சிக்கு அழைத்து சென்றார். இதையடுத்து நாகேந்திரன் தினமும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து உள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் நாகேந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story