பள்ளியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி


பள்ளியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 3 Dec 2022 6:45 PM GMT (Updated: 3 Dec 2022 6:45 PM GMT)

கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி சுழற்சங்கம் சார்பில் நடந்தது. பள்ளிச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார். சங்க ஒருங்கிணைப்பாளர் விநாயகா ரமேஷ், சுழற்சங்க தலைவர் ரவிமாணிக்கம், சண்முகராஜ், பயிற்சியாளர் டென்ஷிங் ஆகியோர் மாணவர்களின் எதிர்கால படிப்பு, தங்களை எப்படி மேம்படுத்திக் கொண்டு முன்னேறுவது பற்றி ஆலோசனைகளை வழங்கி பேசினார்கள்.

நிகழ்ச்சியில் வீராச்சாமி, ராஜ்குமார், முத்து செல்வம், முத்து கணேஷ் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். முடிவில், சுழற்சங்க செயலாளர் மணிகண்ட மூர்த்தி நன்றி கூறினார்.


Next Story