திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாணவர்களுக்கு வழிகாட்டி பயிலரங்கம்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாணவர்களுக்கு வழிகாட்டி பயிலரங்கம் நடைபெற்றது.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அணி எண் 44 மற்றும் 48-ல் உள்ள முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வழிகாட்டி பயிலரங்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக விலங்கியல் துறை பேராசிரியை வசுமதி கலந்து கொண்டு பேசினார். அப்போது, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் திறம்பட செயல்படுவது எப்படி? நாட்டு நலப்பணித் திட்டத்தின் முக்கியத்துவம், அதில் பங்காற்றுவதால் ஏற்படும் பலன்கள் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் கவிதா, சத்தியலெட்கமி மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story